“நமக்கு ஓட்டு போடாதவர்களின் ஆதரவையும் பெறவேண்டும்” - பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை


“நமக்கு ஓட்டு போடாதவர்களின் ஆதரவையும் பெறவேண்டும்” - பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை
x
தினத்தந்தி 5 Aug 2019 5:00 AM IST (Updated: 5 Aug 2019 4:27 AM IST)
t-max-icont-min-icon

நமக்கு ஓட்டு போடாதவர்களின் ஆதரவையும் பெறவேண்டும் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 2-வது நாளான நேற்று நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

அனைவரின் நலனுக்காகவும் நீங்கள் செயலாற்ற வேண்டும். பா.ஜனதாவுக்கு ஓட்டு போடாதவர்கள் மீது எதிர்மறை எண்ணம் ஏதாவது இருந்தால் அதை விட்டுவிடுங்கள். உங்களது வேலைகள், நடத்தை ஆகியவற்றை பார்த்து அவர்களும் உங்களுக்கு நெருக்கமாக வருவார்கள். அவர்கள் ஆதரவையும் பெறுவதன் மூலமே உங்கள் தொகுதிகளை நீங்கள் 2024 தேர்தலிலும் தக்கவைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு மோடி கூறினார்.

Next Story