ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு அச்சுறுத்தல் : ஏர்-இந்தியா விமான கட்டணம் குறைப்பு
அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் காஷ்மீரில் இருந்து தொடர்ந்து தங்கள் ஊர்களுக்கு திரும்புவதால் ஸ்ரீ நகர்-டெல்லி விமான டிக்கெட் விலையை ஏர் இந்தியா குறைத்துள்ளது.
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்தானதால், தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி அமர்நாத் புனித யாத்திரை ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜம்மு-காஷ்மீரில் இருந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வெளியேற்றப்பட்டனர். கல்லூரிகளில் இருந்த மாணவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் காஷ்மீரில் இருந்து தொடர்ந்து தங்கள் ஊர்களுக்கு திரும்புவதால் ஸ்ரீ நகர்-டெல்லி விமான டிக்கெட் விலையை ஏர் இந்தியா குறைத்துள்ளது. ஆண்டுதோறும் அமர்நாத் யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15ம் தேதி வரை நடைபெறும்.
தற்போது தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதால் அமர்நாத் யாத்திரைக்கு மத்திய அரசு தடை விதித்தது. பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் காஷ்மீரில் இருந்து உடனடியாக வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக அமர்நாத் யாத்திரை பக்தர்களும், சுற்றுலா பணிகளும் அவசர அவசரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். இதனால் விமான நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதுகிறது.
இந்நிலையில், காஷ்மீர் சூழ்நிலையை கருத்தில் கொண்டும், அமர்நாத் பக்தர்களின் வசதிக்காகவும் ஏர் இந்தியா நிறுவனம் தனது விமான டிக்கெட்டுக்கான கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவன செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ஸ்ரீநகரில் இருந்து டெல்லி வருவதற்கான விமான கட்டணம், ரூ.9,500ல் இருந்து ரூ.6,715 ஆக குறைக்கப்பட்டு உள்ளது. இதேபோல், டெல்லி -ஸ்ரீநகர் விமான டிக்கெட் கட்டணம் ரூ.6,899 ஆக இருக்கும். வரும் 15ம் தேதி வரை இந்த டிக்கெட் கட்டண குறைப்பு அமலில் இருக்கும்,” என்றார்.
#flyAI: #update#airindia further reduces fare at Rs 6715 srinagar to del and at Rs 6899 Delhi to srinagar till 15th aug (date included). — Air India (@airindiain) August 4, 2019 ""twitter-tweet"">
#flyAI: #update#airindia further reduces fare at Rs 6715 srinagar to del and at Rs 6899 Delhi to srinagar till 15th aug (date included).
— Air India (@airindiain) August 4, 2019 " alt="">Related Tags :
Next Story