தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல் + "||" + Jammu and Kashmir Security Bill filed in Parliament

நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல்

நாடாளுமன்றத்தில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா தாக்கல்
நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.
புதுடெல்லி,

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே பாராளுமன்ற இரு அவைகளும் நேற்று கூடின.  இதில் பேசிய மத்திய உள் துறை மந்திரி அமித்ஷா, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டபிரிவின் 370 வது சட்டபிரிவு ரத்து, காஷ்மீருக்கான 35 ஏ சட்ட பிரிவு ரத்து செய்யப்படுகிறது.  சிறப்பு பிரிவுகளை ரத்து செய்வது குறித்து மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.

இதற்கான குடியரசு தலைவர் ஒப்புதலும் பெறப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறினார்.  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கான அறிவிப்பாணையையும் மத்திய அரசு வெளியிட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி அமித்ஷா ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதாவை இன்று தாக்கல் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து மக்களவையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று கூடுவதற்குமுன் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க.வின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா, நாடாளுமன்ற விவகார மந்திரி பிரலாத் ஜோஷி மற்றும் மத்திய மந்திரிகள் நரேந்திர சிங் தோமர் மற்றும் நிதின் கட்காரி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.  காஷ்மீர் விவகாரம் பற்றி கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.