சுஷ்மா சுவராஜ் மறைவு: மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்


சுஷ்மா சுவராஜ் மறைவு: மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்
x
தினத்தந்தி 7 Aug 2019 12:57 AM IST (Updated: 7 Aug 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மத்திய  வெளியுறவுத்துறை முன்னாள்  மந்திரி சுஷ்மா சுவராஜ்  மாரடைப்பால் காலமானார். 

சுஷ்மா சுவராஜ்  மறைவிற்கு மத்திய மந்திரிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

* சுஷ்மா சுவராஜ் மறைவு இந்திய அரசியலுக்கும் பாஜகவுக்கும் பேரிழப்பு - உள்துறை மந்திரி அமித்ஷா 

* சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து  அதிர்ச்சி அடைந்தேன்.  இந்த  செய்தியை ஏற்றுக்கொள்வது கடினம். ஒட்டுமொத்த தேசமும்  வருத்தமடைகிறது - வெளியுறத்துறை மந்திரி ஜெய்சங்கர்

* 'சுஷ்மா சுவராஜ் கண்ணியமான நாடாளுமன்றவாதி'  சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு பாஜக செயல் தலைவர் - ஜே.பி.நட்டா 

* சுஷ்மா சுவராஜ் மறைந்தது அறிந்து  நான் அதிர்ச்சி அடைந்தேன்.  அவர் ஒரு சிறந்த அரசியல் தலைவர். திறமையான சொற்பொழிவாளர். நாடாளுமன்றத்திற்கு கிடைத்த ஒரு அபூர்வ மனிதர். கட்சி வழியே சிறந்த நட்புடன் பழகியவர். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரித்துக்கொள்கிறேன் - ராகுல்காந்தி

* சுஷ்மா சுவராஜ் காலமானதை அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அவர் எங்களை விட்டு விரைவில் செல்வார் என்று நாங்கள் நினைத்து கூட பார்க்கவில்லை.  நான் இளைஞர் காங்கிரசில் இருந்தபோது 1977 முதல் அவரை எனக்கு நன்கு தெரியும். கடந்த 42 ஆண்டுகளாக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் - காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்.

* மிகத் திறமையான வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ். விவரங்களுடன் எதையும் பேசக்கூடியவர்; மகத்தான திறமையும் சக்தியும் கொண்டவர்  - மார்க்சிஸ்ட் எம்.பி., ரெங்கராஜன் 

* பாஜகவில் உள்ள பெண் நிர்வாகிகளுக்கு உதாரணமாக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். பெண்கள் வாழ்வில் முன்னேறுவது தான் சுஷ்மா சுவராஜூக்கு  செலுத்தும் அஞ்சலியாக இருக்கும் - தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

* ஆளுமையும் அன்பும் நிறைந்த பெண் தலைவராக இருந்தவர். கட்சிகள், மாநிலங்களுக்கு அப்பாற்பட்டு மக்களுக்கு உதவியவர் சுஷ்மா சுவராஜ் - திமுக எம்.பி., கனிமொழி

* சுஷ்மா சுவராஜின் மறைவு இந்திய அரசியலுக்கு இழப்பு. சுஷ்மா சுவராஜ் மிகச்சிறந்த பேச்சாளர்; அறிவுப்பூர்வமான உரைகளை நிகழ்த்தியவர்  - அதிமுக முன்னாள் எம்.பி., மைத்ரேயன்

* சுஷ்மா சுவராஜ் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு. எளிய மக்களுடன் அன்புடன் பழகும் தலைவராக திகழ்ந்தவர். அவருடைய மறைவால் மிகப்பெரிய  ஆளுமையை இழந்திருக்கிறோம் -பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

* நல்ல நாடாளுமன்றவாதி எப்படி திகழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர் சுஷ்மா சுவராஜ் - காங். மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்

Next Story