ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மற்றொரு கேரள இளைஞர் சாவு


ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மற்றொரு கேரள இளைஞர் சாவு
x
தினத்தந்தி 8 Aug 2019 9:27 AM GMT (Updated: 8 Aug 2019 9:27 AM GMT)

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த மற்றொரு கேரள மாநில இளைஞர் உயிரிழந்தார்.

2017-ம் ஆண்டு கேரளாவிலிருந்து 20-க்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தான் சென்று ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தனர். கடந்த ஆண்டும் சில இளைஞர்கள் பயங்கரவாத செயலுக்காக ஆப்கானிஸ்தானுக்கு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் சாய்புதின். மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சாய்புதின் கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மதம் தொடர்பான கல்வியை கற்பதற்காக சவுதி அரேபியா சென்றுள்ளார். பின்னர் இந்தியா திரும்பிவிட்டு, வேலைக்கு செல்வதாக ஐக்கிய அரபு எமிரெட்ஸ் சென்றுள்ளார். பின்னர் வீட்டாருடன் பேசுவதை குறைத்து அவ்வப்போது மெசேஜ் மட்டும் செய்துள்ளார். இறுதியில் அவர் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்துள்ளார் என்பது இந்திய உளவுத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகளுக்கும், அமெரிக்க, ஆப்கானிஸ்தான் படைகளுக்கும் இடையிலான சண்டையின் போது சாய்புதின் கொல்லப்பட்டார் என உளவுத்துறை தெரிவித்துள்ளது. அவருடன் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தவர்கள் தொடர்பாக உளவுத்துறை விசாரணையை மேற்கொண்டுவருகிறது.  கடந்த மாதம் இறுதியில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்து செயல்பட்ட திருச்சூர் வாலிபர் முகமது முகாஷின் உயிரிழந்தான் என்று தெரியவந்தது. அமெரிக்க படைகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தான் என செய்திகள் வெளியாகியிருந்தது. 

Next Story