கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி
கேரளாவில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி.
திருவனந்தபுரம்
கேரளாவில் வயநாடு, மலப்புரம் உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீடுகள் இடிந்து தரை மட்டமாகின. இந்த கோர நிகழ்வுகளில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் மாயமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் வயநாடு மாவட்டம் புத்தமலை பகுதியில் மட்டும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 7 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல் மலப்புரம் மாவட்டம் பவளப்பாறையில் 3 பேரின் உடல் மீட்கப்பட்ட நிலையில், கேரளாவில் மொத்தம் இதுவரை 29 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளன. இதனிடையே, கனமழை காரணமாக கேரளாவில் வயநாடு, மலப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கேரள வெள்ள பாதிப்புகளை பார்வையிட நாளை வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி.
Related Tags :
Next Story