புதுடெல்லி-லாகூர் இடையிலான பஸ் சேவையை இந்தியா ரத்து செய்தது


புதுடெல்லி-லாகூர் இடையிலான பஸ் சேவையை இந்தியா ரத்து செய்தது
x
தினத்தந்தி 12 Aug 2019 11:36 AM GMT (Updated: 12 Aug 2019 12:15 PM GMT)

புதுடெல்லி - லாகூர் இடையிலான பஸ் சேவையை இந்தியா ரத்து செய்துள்ளது.


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு பதிலடி தருவதற்காக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரை பாகிஸ்தான் வெளியேற்றியது. இந்தியாவுடனான தூதரக உறவுகளை குறைத்துக்கொண்டது. வர்த்தக உறவை நிறுத்தியுள்ளது. மேலும், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான சம்ஜாதா எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பாகிஸ்தான் நிறுத்தியது. பாகிஸ்தானின் கோக்ராபூரிலிருந்து ராஜஸ்தானின் பர்மெர் வரையில் இயக்கப்படும் தார் எக்ஸ்பிரஸ் ரெயிலின் சேவையையும் பாகிஸ்தான் நிறுத்தியது. இதுபோன்று இந்தியாவுடனான பஸ் சேவையையும் ரத்து செய்தது பாகிஸ்தான். 

பாகிஸ்தானுக்கு அதன்படியே பதிலடியை கொடுத்த இந்திய அரசு சம்ஜாதா எக்ஸ்பிரஸ் சேவையை ரத்து செய்தது. இப்போது டெல்லியிலிருந்து லாகூருக்கு பஸ் சேவையை நிறுத்தியுள்ளது. டெல்லியில் இருந்து இன்று காலை 6 மணிக்கு பாகிஸ்தானின் லாகூர் நகருக்கு டெல்லி போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்து இயக்கப்பட இருந்தது.  பாகிஸ்தான் அரசின் செயல்பாட்டால் பஸ் சேவை ரத்து செய்யப்பட்டது. இன்று முதல் லாகூர் நகருக்கு பஸ்கள் இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story