காஷ்மீர் விவகாரம்; இந்தியாவுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்ட 4 டுவிட்டர் கணக்குகள் தற்காலிக முடக்கம்


காஷ்மீர் விவகாரம்; இந்தியாவுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்ட 4 டுவிட்டர் கணக்குகள் தற்காலிக முடக்கம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:08 PM IST (Updated: 12 Aug 2019 10:08 PM IST)
t-max-icont-min-icon

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிரான பதிவுகளை வெளியிட்ட 4 டுவிட்டர் கணக்குகள் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கி அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனையடுத்து, ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக தவறாக மற்றும் அடிப்படையற்ற பதிவுகளை வெளியிட்ட 4 டுவிட்டர் கணக்குகள் தற்காலிக முடக்கம் செய்யப்பட்டு உள்ளன.  பாதுகாப்பு அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

இதேபோன்ற செயல்களில் ஈடுபட்ட வேறு 4 கணக்குகளும் முடக்கப்படும் என கூறப்படுகிறது.

Next Story