ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி குறித்து பிரதமர் மோடி விளக்கம்


ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி குறித்து பிரதமர் மோடி விளக்கம்
x
தினத்தந்தி 13 Aug 2019 9:53 AM GMT (Updated: 13 Aug 2019 9:53 AM GMT)

வாகனங்களின் தேவையும் அதற்கான சந்தையும் விரைவில் வலுவான நிலையை எட்டும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் மோடி.

மும்பை, 

ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை 30.9 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.  இதனால் ஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

வாகன விற்பனை 9 மாதங்களாக தொடர்ந்து சரிவில் இருப்பதாக வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனால், மிகப்பெரும் வேலையிழப்பு அபாயத்தை அந்தத்துறை எதிர் நோக்கியுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில், பயணிகள் வாகனத்தின் தயாரிப்பு  17 சதவீதம்  குறைக்கப்பட்டதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிரதமர் மோடி ஆட்டோ மொபைல் துறை குறித்து கூறியதாவது;-

இந்திய நிதி அமைச்சகம் தொடர்ந்து இத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்தப் பின்னடைவு தற்காலிகமானதே. சில கடன் கட்டுப்பாடுகள் மற்றும் ஒழுங்குமுறை நடவடிக்கைகளால் வாகனங்களின் தேவை மற்றும் விற்பனை குறைந்துள்ளது. வாகனங்களின் தேவையும் அதற்கான சந்தையும் விரைவில், வலுவான நிலையை எட்டும்’’

``நான் ஒரு உறுதியை மட்டும் தரமுடியும், இந்தியாவில் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இரண்டும் ஒரே சமயத்தில் வளரும் அளவுக்கு பெரிய சந்தையும், அதற்கேற்ற கொள்கைகள் உருவாக்குவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இங்கு ஆட்டோமொபைலில் ஐசி இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் இரண்டும் ஒன்றாக இருக்கும், ஒன்றாக உருவாகும் ஒன்றிலிருந்து இன்னொன்று கற்றுக்கொள்ளும்" என்று தெரிவித்துள்ளார்.

Next Story