மாவோயிஸ்டுகள் எனக்கூறி பொதுமக்களிடம் கொள்ளையடித்த 2 போலீசார் கைது
பாஸ்தரில் மாவோயிஸ்டுகள் எனக்கூறி பொதுமக்களிடம் கொள்ளையடித்த 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஷ்காரில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பாஸ்தர் பகுதியில் உள்ள நாராயன்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் போன்று வேடமிட்டு பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் பயணிகளை சூறையாடியதற்காக இரண்டு போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுமக்களில் ஒருவரும் உடந்தையாக இருந்ததாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விவகாரத்தில் தொடர்புடைய மற்றொரு போலீஸ்காரர் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தேடும் பணி நடக்கிறது. இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல்துறை தீவிரமாக விசாரணை மேற்கொள்கிறது.
Related Tags :
Next Story