உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம்
உத்தரகாண்டில் நடந்த கல் எறியும் திருவிழாவில் 120 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
உத்தரகாண்டில் சம்பவாத் பகுதியில் ரக்ஷா பந்தனை முன்னிட்டு அங்குள்ள கோவிலில் ஒவ்வொரு வருடமும் பக்வால் என அழைக்கப்படும் கல் எறியும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலில் உள்ள வராஹி என்ற பெண் தெய்வம் உள்ளூர் மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. வேண்டுதல்களை அவர் நிறைவேற்றி தருவார் என்ற நம்பிக்கையும் அவர்களிடம் இருந்து வருகிறது.
அந்த பெண் தெய்வம் திருப்தி அடைவதற்காக கல் எறியும் திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கற்களை வீசி எறிந்தனர். இதில் 120 பேர் வரை காயம் அடைந்தனர்.
Related Tags :
Next Story