தேசிய செய்திகள்

மழை வெள்ளத்தில் ஊருக்குள் புகுந்த முதலை கூட்டம் + "||" + In the rain flood, Crocodile Crowd Into Town

மழை வெள்ளத்தில் ஊருக்குள் புகுந்த முதலை கூட்டம்

மழை வெள்ளத்தில் ஊருக்குள் புகுந்த முதலை கூட்டம்
குஜராத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து வந்த முதலை கூட்டம் ஒன்று ஊருக்குள் புகுந்தன.
வதோதரா,

குஜராத் மாநிலம், வதோதரா நகரத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. அங்கு ஒரே நாளில் அதிகபட்சமாக 500 மி.மீ மழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள விஸ்வாமித்திரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. அத்துடன் வெள்ளத்தில் ஆற்றில் இருந்து 35 முதலைகள் ஊருக்குள் அடித்து செல்லப்பட்டன.


இதையறிந்த வனத்துறை ஊழியர்கள், தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தொண்டு நிறுவனங்களும், தன்னார்வ அலுவலர்களும், ஆற்றில் அடித்து வரப்பட்ட முதலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். பின்பு ஆற்று வெள்ளத்துடன் ஊருக்குள் புகுந்த 35 முதலைகளை மீட்டனர்.

விஸ்வாமித்திரி, தாதர் நதிகளில் சுமார் 250 முதலைகள் உயிர் வாழ்வதாக அந்த நகர வனத்துறை அதிகாரி நிதி தேவ் கூறினார்.