பீகார் எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி, வெடிகுண்டுகள்


பீகார் எம்.எல்.ஏ. வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கி, வெடிகுண்டுகள்
x
தினத்தந்தி 17 Aug 2019 2:00 AM IST (Updated: 17 Aug 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

பீகார் எம்.எல்.ஏ. வீட்டில் இருந்த ஏ.கே.47 துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பாட்னா,

பீகார் மாநிலம் மாட்னா மாவட்டம் லட்மா கிராமத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. அனந்த்சிங் என்பவரின் மூதாதையர் வீட்டில் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டில் இருந்த 26 தோட்டாக்களுடன் கூடிய ஏ.கே.47 துப்பாக்கி, 2 வெடிகுண்டுகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தனர். இதுதொடர்பாக அந்த வீட்டை பராமரித்து வந்தவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் முங்கெர் தொகுதியில் அப்போதையை நீராதார மந்திரி ராஜீவ் ரஞ்சன் சிங்கை எதிர்த்து அனந்த்சிங் தனது மனைவி நீலம் தேவியை நிறுத்தினார். இதில் நீலம் தேவி தோல்வி அடைந்தார். ஆனாலும் ராஜீவ் ரஞ்சன் நான் சட்டசபை தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதற்காக அவரது தூண்டுதலின் பேரிலேயே போலீசார் பாரபட்சமாக நடவடிக்கை எடுப்பதாக அனந்த்சிங் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story