மத்திய பிரதேசத்தில் விநோத ‘கல் எறிதல்’ திருவிழா: 168 பேர் காயம்


மத்திய பிரதேசத்தில் விநோத ‘கல் எறிதல்’ திருவிழா: 168 பேர் காயம்
x
தினத்தந்தி 1 Sept 2019 3:23 PM IST (Updated: 1 Sept 2019 5:48 PM IST)
t-max-icont-min-icon

மத்திய பிரதேசத்தில் ஆண்டுதோறும், ஒருவர் மீது ஒருவர் கற்களை எறியும் விநோத திருவிழா நடைபெற்று வருகிறது

போபால்,

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் ஆண்டுதோறும் ‘கோட்மார்’ எனப்படும் ‘கல் எறிதல்’ திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிகழ்வின் போது மக்கள் ஒருவர் மீது ஒருவர் கற்களை எறிவதை வழக்கமாக கொண்டுள்ளனர். 

திருவிழாவின் போது, பந்துர்னா மற்றும் சாவர்கான் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜாம் நதிக்கரையின் இருபுறங்களிலும் திரண்டனர். பின்னர் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசிக்கொண்டனர். இது நூற்றாண்டு காலங்களாக அங்கு இருந்து வரும் வழக்கம் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 

இது குறித்து சிந்த்வாரா மாவட்ட ஆட்சியர் ஸ்ரீநிவாஸ் சர்மா கூறுகையில், “திருவிழா நடைபெற்ற இடம் முழுவதும் போலீசாரால் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிகழ்வின் போது 168 பேர் சிறிய அளவில் காயமடைந்துள்ளனர். ஆபத்தான காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை” என்று தெரிவித்தார்.

Next Story