மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் எம்.பி. படுகாயம்
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.
பராக்பூர்,
மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் 24 பர்கானாக்கள் மாவட்டத்தின் சியாம்நகரில் உள்ள பா.ஜனதா அலுவலகத்தில் நேற்று திரிணாமுல் காங்கிரசார் வலுக்கட்டாயமாக நுழைந்து தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதையறிந்து பா.ஜனதா எம்.பி. அர்ஜூன் சிங் அங்கு சென்றார். உடனே அவரது காரை அடித்து நொறுக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள், அர்ஜூன் சிங்கையும் தாக்க முயன்றனர்.
இதனால் இரு பிரிவினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வீசிய கல் ஒன்று அர்ஜூன் சிங் மீது தாக்கியதில் அவரது நெற்றியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காயத்தில் தையல் போடப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து மோதல் ஏற்பட்ட பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story