விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்ய உதவப்படும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகள் வெளிப்படையாகவே நடந்தது’ மத்திய அரசு விளக்கம்
தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிப்பு பணிகள் அனைத்தும் வெளிப்படையாகவே நடந்ததாகவும், இதில் அநீதி மற்றும் பாகுபாட்டுக்கு இடமில்லை எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்து உள்ளது.
புதுடெல்லி,
வங்காளதேசம் போன்ற வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்களை அடையாளம் காணும் நோக்கில் அசாம் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரித்து வெளியிடப்பட்டு உள்ளது. இதில் மாநிலத்தில் வசித்து வரும் 19 லட்சத்துக்கும் அதிகமானோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.
குறிப்பாக மாநில எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் என முக்கியமானவர்களின் பெயர்களும் விடுபட்டு இருந்ததால் இந்த பதிவேடு விவகாரம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை அளித்து உள்ளது. இந்த பதிவேட்டுக்கு கட்சி, அமைப்புகள் பேதமின்றி அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இவ்வாறு இந்த விவகாரம் பூதாகரமாகி இருக்கும் நிலையில், இது குறித்து மத்திய அரசு நேற்று தானாகவே விளக்கம் அளித்து உள்ளது. அதாவது இந்த பதிவேடு தயாரிப்பு பணிகள் முற்றிலும் வெளிப்படையாக நடந்ததாகவும், இதில் எவ்வித பாகுபாடோ, அநீதியோ இழைக்கப்படவில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் வீடியோ பதிவு ஒன்றில் கூறியிருப்பதாவது:-
கடந்த 1985-ம் ஆண்டு மத்திய அரசு செய்து கொண்ட முத்தரப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகள் நடந்தன. இந்த பணிகள் அனைத்தும் சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டன. இதில் எவ்வித பாகுபாடோ, அநீதியோ இழைக்கப்படவில்லை.
இதில் விடுபட்டவர்கள் யாரும் மாநிலமற்றவர்கள் ஆகிவிட மாட்டார்கள். அவர்களை வெளிநாட்டினராகவும் மாற்றி விடாது. இறுதிப்பட்டியலில் இடம்பெறாதவர்கள் கைது செய்யப்படமாட்டார்கள். கோர்ட்டுகளை நாடி நிவாரணம் பெறும் வரை அவர்கள் ஏற்கனவே அனுபவித்து வரும் உரிமைகளையும் அனுபவிக்கலாம்.
இந்த பட்டியலில் இடம் பெறாதவர்கள், மேல்முறையீட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள தீர்ப்பாயத்தில் 120 நாட்களுக்குள் வழக்கு தாக்கல் செய்ய தகுதி பெற்றவர்கள் ஆகின்றனர். அதன் தீர்ப்பில் திருப்தி இல்லை என்றால் ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டிலும் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெறலாம். இந்த சட்ட நடவடிக்கைகளுக்கு மாவட்ட சட்டப்பணிகள் அதிகாரிகள் மூலம் அரசும் உதவி செய்யும்.
மதத்தின் அடிப்படையில் இந்த பதிவேடு தயாரிக்கப்படவில்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கான விண்ணப்ப படிவத்தில் மதம் தொடர்பான கேள்வியே இல்லை. மேலும் பதிவேடு தயாரிக்கும் ஒட்டுமொத்த பணிகளும் அறிவியல் முறைப்படியே நடத்தப்பட்டன. நிர்வாக வழிகாட்டுதலில் நடைபெறவில்லை. இவ்வாறு அந்த வீடியோவில் ரவீஷ்குமார் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story