பிரதமர் மோடி நாளை ரஷியா பயணம்: புதினுடன் வருடாந்திர பேச்சுவார்த்தை நடத்துகிறார்

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நாளை ரஷியா செல்கிறார். அப்போது அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுடன் வருடாந்திர பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுப்பயணம் குறித்து வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி நாளையும், நாளை மறுதினமும் (புதன் மற்றும் வியாழன்) ரஷியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இது 36 மணி நேர குறுகிய பயணம். இதன் 2 முக்கிய நோக்கங்கள், அங்கு நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள பிரதமருக்கு அழைப்பு வந்துள்ளது. அதேபோல அவர் ரஷிய அதிபருடன் 20-வது வருடாந்திர இருநாட்டு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார்.
ரஷியாவில் உள்ள விலாடிவோஸ்டோக் நகருக்கு நாளை சென்றடையும் பிரதமர் மோடி அங்குள்ள மிகப்பெரிய கப்பல் கட்டும் தளத்தை ரஷிய அதிபருடன் பார்வையிடுகிறார். இரவு விருந்துக்கு பின்னர் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் இருநாட்டு பிரதிநிதிகளுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள்.
மறுநாள் காலை பிரதமர் மோடி சில இருதரப்பு பேச்சுவார்த்தையில் கலந்துகொள்கிறார். அதோடு கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்கிறார். அந்நகரில் நடைபெறும் ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டியையும் அதிபர் புதினும், பிரதமர் மோடியும் பார்க்கிறார்கள். இவ்வாறு விஜய் கோகலே கூறினார்.

Related Tags :
Next Story