டெல்லி கட்டிட விபத்தில் இளம்பெண் பலி; பலர் காயம்


டெல்லி கட்டிட விபத்தில் இளம்பெண் பலி; பலர் காயம்
x
தினத்தந்தி 3 Sept 2019 6:28 AM IST (Updated: 3 Sept 2019 6:28 AM IST)
t-max-icont-min-icon

டெல்லி கட்டிட விபத்தில் இளம்பெண் பலியாகி உள்ளார். பலர் காயம் அடைந்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியின் வடகிழக்கு பகுதியில் சீலாம்பூர் என்ற இடத்தில் நேற்றிரவு 4 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வந்த கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

திடீரென நடந்த இந்த சம்பவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு உள்ளனர்.  இதில் 22 வயது இளம்பெண்ணின் உடல் மீட்கப்பட்டு உள்ளது.  அவர் ஹீனா என அடையாளம் காணப்பட்டு உள்ளார்.

இதுவரை 6 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  கட்டிடம் கட்டப்பட்டு வந்த நிலையில் உள்ளூர்வாசிகள் சிலர் தரை தளத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர்.  இதற்காக பலர் அங்கு கூடியுள்ளனர்.  இந்நிலையில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது என அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர்.

Next Story