முன்னாள் காளஹண்டி அரசர் காலமானார்
முன்னாள் காளஹண்டி அரசர் உதித் பிரதாப் தியோ உடல்நல குறைவால் காலமானார்.
புவனேஸ்வர்,
ஒடிசாவில் காளஹண்டி பகுதியின் அரசராக இருந்தவர் உதித் பிரதாப் தியோ (வயது 71). ஒடிசாவின் ஜுனாகர் சட்டசபை தொகுதியில் கடந்த 1974ம் ஆண்டு முதல் 1977ம் ஆண்டு வரை எம்.எல்.ஏ.வாக பதவியில் இருந்துள்ளார்.
தியோ தனது மனைவியான ராணி பத்மா மஞ்சரி தேவி உடன் பா.ஜ.க.வில் தன்னை இணைத்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
அவர் உடல்நிலை குறைவால் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவரது மறைவுக்கு பா.ஜ.க. மாநில தலைவர் வசந்த குமார் பண்டா மற்றும் கட்சியின் மூத்த தலைவர் கே.வி. சிங் தியோ தங்களது இரங்கல்களை தெரிவித்து கொண்டனர்.
Related Tags :
Next Story