சோனியா காந்தியுடன் ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. சந்திப்பு


சோனியா காந்தியுடன் ஆம் ஆத்மி அதிருப்தி எம்.எல்.ஏ. சந்திப்பு
x
தினத்தந்தி 3 Sep 2019 12:06 PM GMT (Updated: 3 Sep 2019 12:06 PM GMT)

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ. அல்கா லம்பா சந்தித்தார்.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி கட்சியுடன் கடந்த சில தினங்களாக கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் அக்கட்சியின் எம்.எல்.ஏ. அல்கா லம்பா, இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

சுமார் 50 நிமிடங்கள் சோனியாவை அல்கா லம்பா சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வரவில்லை. டெல்லி  சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த  நிலையில்,  அல்கா லம்பா சோனியா காந்தியை சந்தித்திருப்பது, அவர் காங்கிரஸ் கட்சியில் இணையக்கூடும் என்ற ஊகத்துக்கு வழி வகுத்துள்ளது.

இதற்கு ஏற்றார் போல், சமீப காலமாகவே அவர் காங்கிரஸ் கட்சியின் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு வருகிறார். ஆம் ஆத்மியில் இணைவதற்கு முன்னதாக அல்கா லம்பா காங்கிரஸ் கட்சியின் மகளிரணியில் இருந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

Next Story