சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக அஜய் குமார் மிட்டல் -கொலிஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய தலைமை நீதிபதியாக மேகாலயா மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை நியமித்து கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,
சென்னை ஐகோர்ட்டிற்கு புதிய தலைமை நீதிபதியாக மேகாலயா மாநில ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி அஜய் குமார் மிட்டலை நியமித்து கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. தற்போது சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக உள்ள தஹில் ரமணியை மேகாலயா மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்து உள்ளது.
மேகாலயா ஐகோர்ட்டிற்கு மாற்றுவதை மறுபரிசீலனை செய்யகோரிய நீதிபதி தஹில் ரமணியின் கோரிக்கையை, செப்டம்பர் 3-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சி.ஜே.ஐ. ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் போப்டே, ரமணா, அருண் மிஸ்ரா மற்றும் நரிமன் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் அமைப்பு நிராகரித்தது.
ஒரு பெரிய உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய தலைமை நீதிபதியை, சிறிய மாநிலத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது. இதுவே முதன்முறை என சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதிபதி அஜய் குமார் மிட்டல் கிட்டத்தட்ட 24 ஆண்டுகளாக சட்ட பயிற்சி பெற்ற பின்னர், முதலில் 2004 ஜனவரியில் பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட்டின் நீதிபதியாக பதவி ஏற்றார்.
Related Tags :
Next Story