கர்நாடக முன்னாள் மந்திரி சிவக்குமாருக்கு செப்.13 வரை விசாரணை காவல்
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட கர்நாடக மாநில முன்னாள் மந்திரி சிவக்குமாரை செப்டம்பர் 13 வரை விசாரணை காவலில் வைக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கர்நாடக முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான டெல்லி வீட்டில் கணக்கில் வராத பணம் ரூ.8½ கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு அவரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்நிலையில், முன்னாள் மந்திரி சிவக்குமாரை டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதையடுத்து, சிவக்குமாரை செப்டம்பர் 13ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
Related Tags :
Next Story