விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?


விமான வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடக்கம்?
x
தினத்தந்தி 5 Sept 2019 4:08 PM IST (Updated: 5 Sept 2019 4:08 PM IST)
t-max-icont-min-icon

விமானத்தைப்போல வசதிகளுடன் ஐ.ஆர்.சி.டி.சி இயக்கும் இந்தியாவின் முதல் ‘தனியார்’ ரெயில் சேவை அக்டோபர் 4 முதல் தொடங்குகிறது.

புதுடெல்லி

இந்திய ரெயில்வேயின் இரு வழித்தடங்களில் தனியார்களை வைத்து  ரெயில்களை இயக்க  ரெயில்வே வாரியத்தலைவர் வி.கே.யாதவ் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

ஆரம்ப கட்டமாக சுற்றுலா மற்றும் ஐஆர்சிடிசி ஆகியவற்றுக்கு தலா ஒரு ரெயில்களை இயக்க முடிவு செய்யப்பட்டது.

ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் அக்டோபர் 4-ந்தேதி முதல் தனது ரெயில் சேவையை  தொடங்கும் என்று அதன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் அகமதாபாத்-மும்பை தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள்  தெரிவித்தன. டெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் செவ்வாய்க்கிழமைகளைத் தவிர்த்து வாரத்தின் ஆறு நாட்களிலும் இயங்கி வருகிறது.

பயணிகள் தங்கள் பயணத்திற்கு 15 நாட்களுக்கு முன்னர் ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும் என்றும், டிக்கெட் கட்டணங்களுக்கு ஐ.டி.சி.டி.சி டைனமிக் கட்டணம் மற்றும் விலை மாதிரியாக இருக்க கூடும்  என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

டெல்லி-லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ்  விமான பாணி வசதிகளை பயணிகளுக்கு வழங்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆரம்பத்தில் இந்த வழித்தடத்தில் உள்ள நிர்வாக வகுப்பு பயணிகள் மிகக் குறைந்த கட்டணத்தை செலுத்துவதன் மூலம் நிலையங்களில் ஓய்வறை வசதிகளைப் பெறலாம். ரெயில்வே ஓய்வறையில் விமான நிலைய ஓய்வறையில் உள்ள அனைத்து வசதியும் இருக்கும். மற்ற பிரீமியம் வசதிகளில், பயணிகள் ஓய்வறைக்குள் வணிகக் கூட்டத்தை நடத்துவதற்கான வசதிகளையும் பெறலாம்.

விமானம் போன்ற பிற சேவைகளில், பயணிகளுக்கு சேவை செய்ய ஐ.ஆர்.சி.டி.சி விமானங்கள் போன்று ரெயில் பணிப்பெண்களையும்   நிறுத்தக்கூடும்.

தேஜஸ் எக்ஸ்பிரசில் ரெயில் ஓட்டுநர், காவலர், ஆர்.பி.எஃப் ஆகியோரை இந்திய ரெயில்வே வழங்கும், டிக்கெட், ஊழியர்கள், பணியாளர்கள், கேட்டரிங் ஆகியவை ஐ.ஆர்.சி.டி.சியால் நிர்வகிக்கப்படும்.

ஐ.ஆர்.சி.டி.சி சேவைகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு  டெண்டர் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story