உபா சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து மனு: மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
உபா சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
புதுடெல்லி,
சட்ட விரோத தடுப்பு சட்டத்தில் (உபா) திருத்தம் செய்து கடந்த பாராளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு நிறைவேற்றியது. திருத்தப்பட்ட சட்டத்தின் கீழ், பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் தனிநபரையும் பயங்கரவாதி என அறிவிக்கலாம். இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி அசோக் பூஷன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்த மனு தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்குமாறு கோரிய நீதிபதிகள் மனு மீதான விசாரணையை தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story