நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாத பதிலடி கொடுக்கப்படும் -வெங்கையா நாயுடு
நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார்.
புதுடெல்லி,
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இரண்டு ஆண்டு பதவிக்காலத்தில் ஆற்றிய 95 முக்கிய உரைகள் தொகுப்பான லோக்தந்திர கேஸ்வர் மற்றும் குடியரசின் நெறிமுறைகள் இரண்டாவது தொகுதி இன்று புத்தகமாக வெளியிடப்பட்டது.
இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-
ஜனநாயக விழுமியங்களில் ஜனாதிபதி கோவிந்தின் நம்பிக்கை நிகரில்லாதது.
இந்தியா ஒருபோதும் ஒரு ஆக்கிரமிப்பாளராக இருந்ததில்லை, முழு உலகையும் ஒரே குடும்பம் என்று நம்புவதால் எந்த நாட்டையும் தாக்கவில்லை. விவாதம் மூலம் பிரச்சினைகளை தீர்க்க முடியும்.
சமீபகாலமாக நம்மை சீண்டிப் பார்ப்பவர்களை நாம் ஏதும் செய்யாமல் இருந்து வருகிறோம். ஆனால், யாராவது நம்மை தாக்கினால் அவர்கள் தங்களது வாழ்நாளின் எஞ்சிய காலம் முழுவதும் மறக்க முடியாதவாறு சரியான பதிலடி கொடுக்கப்படும்.
நம்மை சீண்டிப் பார்ப்பவர்கள் உள்பட அனைவரும் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்’ என எச்சரித்துள்ளார்.
Related Tags :
Next Story