நீதிபதி அடித்ததாக போலீஸ்காரர் புகார் - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு + "||" + The policeman complains that the judge had struck - ordering a high-level investigation
நீதிபதி அடித்ததாக போலீஸ்காரர் புகார் - உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவு
நீதிபதி அடித்ததாக போலீஸ்காரர் புகார் தெரிவித்ததால், உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாட்னா,
பீகார் மாநிலம் கடிஹார் மாவட்ட செசன்சு கோர்ட்டில் மூத்த நீதிபதியாக பணியாற்றி வருபவர் பிரதீப் குமார் மாலிக். இவரது பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்ட போலீஸ்காரர் ஹரிவன்ஷ் குமார். இருவரும் ஒருவர்மீது ஒருவர் சஹாயக் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.
போலீஸ்காரர் தனது புகாரில், “வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு செல்லும் வழியில் நீதிபதியின் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், எனது கன்னத்தில் அறைந்தார். எனது சீருடையை கிழித்தார். கோர்ட்டை அடையும்வரை என்னை திட்டிக்கொண்டே வந்தார். நான் அங்கிருந்து ஓடி தப்பித்தேன்“ என்று கூறியுள்ளார்.
நீதிபதி தனது புகாரில், “போலீஸ்காரர் எனது அறைக்குள் அத்துமீறி புகுந்து என்னை வசைபாடினார்“ என்று கூறியுள்ளார். மேலும், கோர்ட்டு அதிகாரி ஒருவரும் போலீஸ்காரருக்கு எதிராக புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து, இவை மீது உயர்மட்ட விசாரணை நடந்து வருவதாக சஹாயக் போலீஸ் நிலைய அதிகாரி ராகேஷ் குமார் தெரிவித்தார்.