சந்திரயான்-2: விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது - பினராயி விஜயன்


சந்திரயான்-2: விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது - பினராயி விஜயன்
x
தினத்தந்தி 7 Sept 2019 6:37 PM IST (Updated: 7 Sept 2019 6:37 PM IST)
t-max-icont-min-icon

சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கு பொதுமக்களும்,  பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக டுவீட் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் இது குறித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:- 

சந்திரயான்-2 திட்டத்தில் பணியாற்றிய விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது. விஞ்ஞானிகளின் கடும் உழைப்பிற்கான பலனை அறுவடை செய்யும் காலம் வெகுதொலைவில் இல்லை சந்திரயான்-2 திட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சோதனை விரைவில் சரியாகிவிடும் என்றார்.

Next Story