‘லேண்டர் விழுந்து நொறுங்கி இருக்க வாய்ப்பு இல்லை’ - இஸ்ரோ முன்னாள் இயக்குனர் கருத்து
நிலவின் மேற்பரப்பில் லேண்டர் விழுந்து நொறுங்கி இருக்க வாய்ப்பு இல்லை என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்,
சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும்போது கடைசி நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்தது. இதற்கான காரணங்களை இஸ்ரோ தொடர்ந்து ஆய்வு செய்து வருவதுடன், மீண்டும் அதை உயிர்ப்பிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் லேண்டர் கருவி நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கி இருக்காது என இஸ்ரோ முன்னாள் இயக்குனர் சசிகுமார் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டருக்கும், லேண்டருக்கும் இடையேயான தகவல் தொடர்பு நீடிப்பதாகவே தெரிகிறது. எனவே லேண்டர் கருவி விழுந்து நொறுங்கி இருக்க வாய்ப்பு இல்லை. அப்படியேதான் இருக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து’ என்று தெரிவித்தார்.
இறுதி நிலவரம் தெரியும் வரை நம்பிக்கையுடன் இருப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story