குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி


குஜராத்தில் ஆற்றில் மூழ்கி 10 பேர் பலி
x
தினத்தந்தி 8 Sept 2019 3:04 AM IST (Updated: 8 Sept 2019 3:04 AM IST)
t-max-icont-min-icon

குஜராத்தில் விநாயகர் சிலை கரைத்தபோது ஆற்றில் மூழ்கி 10 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் கேடா மாவட்டத்தில் உள்ள ஆரவள்ளி மற்றும் கபத்வான்ஜ் பகுதியில் விநாயகர் சிலைகள் வாத்ராக், மோகர் ஆறுகளில் கரைக்கப்பட்டன. சிலைகளை கரைத்த பின்னர், பக்தர்கள் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்தனர். அப்போது வாத்ராக் ஆற்றில் மூழ்கி 6 வாலிபர்களும், மோகர் ஆற்றில் மூழ்கி 4 வாலிபர்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Next Story