உன்னாவ் சிறுமியிடம் வாக்குமூலம்: எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தற்காலிக கோர்ட்டு
உன்னாவ் சிறுமியிடம் வாக்குமூலம் பெறுவதற்காக, எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் தற்காலிக கோர்ட்டு அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் கிராமத்தில் 2017-ம் ஆண்டு ஒரு சிறுமியை கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏ. குல்தீப்சிங் செங்காரும், அவரது கூட்டாளியும் கற்பழித்தனர். இந்த வழக்கில் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். இந்நிலையில் காரில் சென்றபோது விபத்தில் சிக்கிய அந்த சிறுமி பலத்த காயத்துடன் தப்பினார். அவர் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி கோர்ட்டு, எய்ம்ஸ் ஆஸ்பத்திரியில் உள்ள விபத்து சிகிச்சை மையத்தில் இருக்கும் கூட்ட அரங்கில் தற்காலிக கோர்ட்டு அமைக்க உத்தரவிட்டது. வருகிற 11-ந் தேதியில் இருந்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் வாக்குமூலம் பெற வேண்டும். தினசரி அடிப்படையில் அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்தலாம். விசாரணையின்போது அங்கு இருக்கும் கண்காணிப்பு கேமராக்களை ‘ஆப்’ செய்துவிட வேண்டும். வீடியோவோ, ஆடியோவோ பதிவு செய்யக்கூடாது என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

Related Tags :
Next Story