100 நாள் கொண்டாட்டம் தேவைதானா? - பா.ஜனதா மீது பிரியங்கா தாக்கு
பல்வேறு துறைகள் அழிவை நோக்கி செல்லும்போது பா.ஜனதாவின் 100 நாள் கொண்டாட்டம் தேவைதானா என பிரியங்கா கடுமையாக சாடியுள்ளார்.
புதுடெல்லி,
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து 100 நாட்களை நிறைவு செய்து உள்ளது. இதனை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. இந்தநிலையில் நாட்டில் பல்வேறு துறைகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, பா.ஜனதாவின் 100 நாள் கொண்டாட்டம் தேவைதானா? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘மத்திய பா.ஜனதா அரசு பதவி ஏற்று 100 நாட்கள் நிறைவடைந்ததை கட்சி அலுவலகங்களில் கொண்டாடி வருகிறது. ஆனால் ஆட்டோ மொபைல் துறை, போக்குவரத்துத்துறை, சுரங்கத்துறையின் அழிவு கொண்டாட்டமாகத்தான் இதை பார்க்க வேண்டியது உள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

Related Tags :
Next Story