மத்திய அரசு நாட்டின் மோசமான நிலையை மறைக்க முயற்சி செய்கிறது - பிரியங்கா காந்தி கண்டனம்


மத்திய அரசு நாட்டின் மோசமான நிலையை மறைக்க முயற்சி செய்கிறது - பிரியங்கா காந்தி கண்டனம்
x
தினத்தந்தி 8 Sept 2019 10:47 PM IST (Updated: 8 Sept 2019 10:47 PM IST)
t-max-icont-min-icon

பொய் பிரசாரங்கள் மூலம் நாட்டின் மோசமான நிலையை மறைக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜனதா அரசு தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை பிடித்து 100 நாட்களை நிறைவு செய்து உள்ளது. இதனை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாட பா.ஜனதா திட்டமிட்டுள்ளது.

நாட்டில் பல்வேறு துறைகள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும்போது, பா.ஜனதாவின் 100 நாள் கொண்டாட்டம் தேவைதானா? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் பிரியங்கா காந்தி இன்று தனது டுவிட்டரில், ‘பொருளாதாரம் அழிவு நிலைக்கு சென்றுகொண்டிருக்கும் நிலையிலும் மோடி அரசு மவுனமாக உள்ளது. பல்வேறு நிறுவனங்கள் ஆபத்தில் உள்ளன. வர்த்தகம் மந்த நிலையில் உள்ளது. நாடகம், வஞ்சகம், பொய்கள் மற்றும் பிரசாரங்கள் மூலம் அவர்கள் நாட்டின் மோசமான நிலையை மறைக்க முயற்சிக்கின்றனர்’ என்று பதிவிட்டுள்ளார்.


Next Story