மகாபாரத காலத்தில் இருந்தே வடகிழக்கு மாநிலங்களுடன் தொடர்பு - அமித்ஷா பெருமிதம்


மகாபாரத காலத்தில் இருந்தே வடகிழக்கு மாநிலங்களுடன் தொடர்பு - அமித்ஷா பெருமிதம்
x
தினத்தந்தி 9 Sept 2019 2:07 AM IST (Updated: 9 Sept 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

மகாபாரத காலத்தில் இருந்தே வடகிழக்கு மாநிலங்களுடன் கலாசார தொடர்பு இருந்ததாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

கவுகாத்தி,

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று அசாமில் நடந்த வடகிழக்கு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் வடகிழக்கு மாநிலங்களுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் இடையே மகாபாரத காலத்தில் இருந்தே கலாசார தொடர்பு இருந்ததாக கூறினார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘மகாபாரதத்தில் வரும் பப்ருவாகன் அல்லது கடோட்கஜன் வடகிழக்கை சேர்ந்தவர்கள். சித்ரங்கதாவை மணிப்பூரில் வைத்துதான் அர்ஜூன் திருமணம் செய்தார். கிருஷ்ணரின் பேரன் கூட வடகிழக்கில்தான் திருமணம் செய்து கொண்டார். அந்தவகையில் வடகிழக்குக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இடையேயான கலாசார உறவு புதிதல்ல. அடிமைத்தன காலத்தில் தற்காலிகமாக இந்த உறவு பாதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இதை சீரமைத்து முன்னெடுத்து செல்வதற்கான நேரம் தற்போது வந்துள்ளது’ என்று தெரிவித்தார். 2020-ம் ஆண்டுக்குள் வடகிழக்கு பகுதியை சேர்ந்த 8 மாநிலங்களையும் நாட்டின் ரெயில்வே மற்றும் வான் பாதை வரைபடத்தில் இணைப்பதுதான் நோக்கம் என்று கூறிய அமித்ஷா, கடந்த 5 ஆண்டு பா.ஜனதா ஆட்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறினார்.

Next Story