ஒப்பந்தங்களை பெற ரூ.77 கோடி லஞ்சம்: ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு
ஒப்பந்தங்களை பெற ரூ.77 கோடி லஞ்சம் கொடுத்ததாக, ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது.
புதுடெல்லி,
லண்டனை மையமாக கொண்டு இயங்கி வரும் பிரபல ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களான எச்.ஏ.எல்., ஓ.என்.சி.ஜி., கெயில் போன்ற நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை வழங்கி வருகிறது. இந்த நிறுவனங்களிடம் இருந்து ஒப்பந்தங்களை பெறுவதற்காக கடந்த 2007 முதல் 2011 வரையிலான ஆண்டுகளில் தரகர் ஒருவருக்கு ரூ.77 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த புகார் தொடர்பாக ரோல்ஸ்ராய்ஸ் மற்றும் அதன் இந்திய கிளை நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சி.பி.ஐ. புகாரின் அடிப்படையில் ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை மீது அமலாக்கத்துறையும் தற்போது குற்ற வழக்கு பதிவு செய்து உள்ளது. இந்த சம்பவம் பொதுத்துறை நிறுவன வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story