அரியானாவில் கூட்டணி: காங்கிரசுடன் மாயாவதி ரகசிய பேச்சுவார்த்தை
அரியானாவில் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரசுடன் மாயாவதி ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
புதுடெல்லி,
அரியானாவில் சட்டசபை தேர்தல் வருகிற அக்டோபர் மாதம் நடைபெற உள்ளது. முன்னதாக கூட்டணி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
புதுடெல்லியில் நேற்று, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி மற்றும் அரியானா முன்னாள் முதல் மந்திரி பூபிந்தர் சிங் ஹுடா இருவரும் ரகசியமாக சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அரை மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த கூட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட மாநில காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜாவும் இருந்தார்.
பாஜக ஆளும் இம்மாநிலத்தில் 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் கூட்டாக போட்டியிட இரு கட்சிகளும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன.
Related Tags :
Next Story