போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் அதிரடி நீக்கம்


போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் அதிரடி நீக்கம்
x
தினத்தந்தி 10 Sept 2019 2:00 AM IST (Updated: 10 Sept 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

போலி சான்றிதழ் கொடுத்து 20 ஆண்டுகளாக ஆசிரியராக இருந்தவர் அதிரடி நீக்கம் செய்யப்பட்டார்.

பல்லியா,

உத்தரபிரதேசம் மாநிலம் பல்லியா மாவட்டம் ரேவ்தி பகுதியில் ஒரு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக நரைஞ்சி யாதவ் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் போலியான ஆசிரியர் பயிற்சி (பி.எட்.) சான்றிதழை பயன்படுத்தி ஆசிரியர் பணியில் சேர்ந்ததாக கல்வித்துறையினருக்கு புகார் வந்தது.

அதன்பேரில் கல்வித்துறை அதிகாரிகள் நரைஞ்சி யாதவின் சான்றிதழ்களை ஆய்வு செய்தனர். அப்போது அவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்ததும், அவரது ஆசிரியர் பயிற்சி சான்றிதழ் போலியானது என்பதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து நரைஞ்சி யாதவை, வேலைக்குச் சேர்ந்த 1999-ம் ஆண்டில் இருந்து பணிநீக்கம் செய்ததோடு, அவருக்கு இதுவரை வழங்கப்பட்ட சம்பள தொகையையும் திருப்பி செலுத்த கல்வி நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது.

இதுதவிர கல்வித்துறையை ஏமாற்றிய குற்றத்திற்காக போலீசில் புகார் செய்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.


Next Story