மின் கம்பிகளை திருடும்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி


மின் கம்பிகளை திருடும்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலி
x
தினத்தந்தி 10 Sept 2019 2:06 AM IST (Updated: 10 Sept 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

மின் கம்பிகளை திருடும்போது மின்சாரம் தாக்கி 4 பேர் பலியாயினர்.

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம் திகம்கார் மாவட்டத்தில் பனர்சி என்ற கிராமம் உள்ளது. இங்கு நேற்று அதிகாலை மின்தடை ஏற்பட்டது. அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த 4 பேர் மின்கம்பத்தில் ஏறி மின்கம்பிகளை திருட முயன்றனர்.

அப்போது திடீரென மீண்டும் மின்சாரம் வந்தது. அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டனர். இதில் 4 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அதில் மின்சாரம் தாக்கி பலியானவர்கள் அதே பகுதியை சேர்ந்த கோகுல் குஸ்வாகா, நிவரி மாவட்டத்தை சேர்ந்த பிரிதம், சஞ்சய் பரர் மற்றும் ராஜூ ஆகியோர் என்பது தெரியவந்தது.

Next Story