இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிம ஆவணங்களை ஹெல்மெட்டில் ஒட்டி பயணம் செய்யும் நபர்
குஜராத்தில் இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை ஹெல்மெட்டில் ஒட்டி நபர் ஒருவர் பயணம் செய்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்.
வதோதரா,
குஜராத்தின் வதோதரா நகரில் வசித்து வருபவர் ஆர். ஷா. இவர் தனது இரு சக்கர வாகன ஹெல்மெட்டில் இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம், ஆர்.சி. மற்றும் பிற ஆவணங்களை பாதுகாப்புடன் ஒட்டி வைத்து உள்ளார்.
இதுபற்றி கூறும் அவர், பைக் ஒன்றை ஓட்டுவதற்கு முன்பு நான் அணிவது ஹெல்மெட். அதனாலேயே அதன் மீது அனைத்து ஆவணங்களையும் நான் ஒட்டி வைத்துள்ளேன். இதனால் புதிய வாகன விதிகளின்படி எனக்கு அபராதம் எதுவும் விதிக்க முடியாது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story