பெண் மத்திய மந்திரி மீதான பஞ்சாப் முதல்வரின் சர்ச்சை விமர்சனம்
பெண் மத்திய மந்திரி மீதான பஞ்சாப் முதல்வரின் விமர்சனம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சண்டிகார்,
அகல் தக்த் கட்சியை பஞ்சாப் அரசு பலவீனப்படுத்த முயற்சிக்கிறது என்று மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் படல் குற்றம் சாட்டினார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளித்த பஞ்சாப் முதல்வர் "தான் சந்தித்த மிக மோசமான பொய் கூறிய பெண்" என்று கூறினார். இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது
மத்திய மந்திரி ஹர்சிம்ரத் கவுர் படலுக்கு எதிராக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கூறிய கருத்துக்கள் பெண்களை இரண்டாம் நிலையில் கருதும் நிலப்பிரபுத்துவ மனநிலையை பிரதிபலிப்பதாக சிரோமணி அகாலி தளம் கூறி உள்ளது.
முதலமைச்சர் தீவிரமான மொழியைப் பயன்படுத்துவதாகக் குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி, அவரை நிபந்தனையற்ற மன்னிப்புக் கோர வலியுறுத்தி உள்ளது.
Related Tags :
Next Story