இஸ்ரோ தலைவர் சிவனுடன் கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு சந்திப்பு


இஸ்ரோ தலைவர் சிவனுடன் கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு சந்திப்பு
x
தினத்தந்தி 12 Sept 2019 11:12 AM IST (Updated: 12 Sept 2019 11:12 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரோ தலைவர் சிவனை கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு சந்தித்தது.

பெங்களூரு,

கலிபோர்னியா இன்ஸ்டிட்யூட் தொழில்நுட்ப குழுவினர் (CalTech) இஸ்ரோ தலைவர் கே.சிவனை சந்தித்து பேசினர். விண்வெளித்துறை செயலரையும் பேராசிரியர் டேவிட் டெர்ரல் தலைமையிலான கலிபோர்னியா குழு சந்தித்தது. சந்திரயான் 2  விண்கலம் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கி.மீட்டர் தொலைவே இருந்த போது, கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து நிலவின் மேற்பரப்பில் விழுந்தது.  

சேதம் அடையாமல் சாய்ந்த நிலையில் கிடக்கும் விக்ரம் லேண்டருடனான தொடர்பை ஏற்படுத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த சூழலில், கலிபோர்னியா விஞ்ஞானிகள் குழு இஸ்ரோ தலைவரை சந்தித்துள்ளது. 

Next Story