மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் பலி


மோகன் பகவத் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் பலி
x
தினத்தந்தி 12 Sept 2019 12:25 PM IST (Updated: 12 Sept 2019 12:25 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 6 வயது சிறுவன் பலியானான்.

ஜெய்ப்பூர், 

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் உள்ள திஜாராவில்  உள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் அல்வார் நகருக்கு மோகன் பகவத் திரும்பிக்கொண்டு இருந்தார். 

மோகன் பகவத்திற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பாக அவரது காருக்கு முன்னும் பின்னும் 10 -க்கும் மேற்பட்ட கார்கள் அணிவகுத்து சென்றன. 

மோகன் பகவத்தின் பாதுகாப்பு வாகனம் ஒன்று,  சாலையில் எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முதியவர் படுகாயம் அடைந்தார். அவரது 6 வயது பேரன் பரிதாபமாக உயிரிழந்தான். அந்த முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Next Story