தேசிய செய்திகள்

தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் ஏன்? -கொலீஜியம் விளக்கம் + "||" + Cheif judges transfered - Collegium explains

தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் ஏன்? -கொலீஜியம் விளக்கம்

தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் ஏன்? -கொலீஜியம் விளக்கம்
தலைமை நீதிபதிகள் பணியிட மாற்றம் தொடர்பாக கொலீஜியம் அமைப்பு விளக்கமளித்துள்ளது.
புதுடெல்லி,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமானியை, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்தது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானி விடுத்த கோரிக்கையும்  நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து தன் பதவியை வி.கே.தஹில் ரமானி ராஜினாமா செய்தார்.

அவரது முடிவை மறுபரிசீலனை செய்யும்படி சக நீதிபதிகள் கூறியும், அதை  அவர் ஏற்கவில்லை. திங்கட்கிழமை முதல் அவர் ஐகோர்ட்டுக்கு வரவில்லை.

இந்த நிலையில், தலைமை நீதிபதி வி.கே.தஹில் ரமானியை பணியிடம்  மாற்றிய முடிவை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு வக்கீல் சங்கம், பெண் வக்கீல்கள் சங்கம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி  வக்கீல்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவை அறிவித்தன.

இதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில்  ஈடுபட்டனர். 

இந்நிலையில், நீதிபதிகள் இடமாற்றம் ஏன் என்பது குறித்து தேவை ஏற்பட்டால் தகவல்களை வெளியிட தயார் என கொலீஜியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.  சிறப்பான நிர்வாகத்திற்காக தேவையான வழிமுறைகள் பின்பற்றப்பட்டே நீதிபதிகள் இடமாற்றம் நடைபெறுவதாகவும் விளக்கம் அளித்துள்ளது.