74-வது பிறந்தநாளின் போது - திகார் சிறையில் ப.சிதம்பரம்


74-வது பிறந்தநாளின் போது - திகார் சிறையில் ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 13 Sept 2019 4:15 AM IST (Updated: 13 Sept 2019 2:14 AM IST)
t-max-icont-min-icon

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் 14 நாள் நீதிமன்ற காவலில் கடந்த 5-ந்தேதி முதல் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 14 நாள் சி.பி.ஐ. காவல் முடிவடைந்து வருகிற 19-ந்தேதி அவர் சி.பி.ஐ. தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்.

இதற்கிடையே, தனக்கு ஜாமீன் வழங்க கோரி ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு தனிக்கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. பின்னர் இந்த மனு மீதான விசாரணை வருகிற 23-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், ப.சிதம்பரத்துக்கு வருகிற 16-ந்தேதி 73 வயது முடிவடைந்து 74-வது வயது பிறக்கிறது. அவர் தனது பிறந்த நாளில் சிறையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

Next Story