கொல்கத்தாவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பேரணி


கொல்கத்தாவில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக மம்தா பானர்ஜி பேரணி
x
தினத்தந்தி 13 Sept 2019 5:00 AM IST (Updated: 13 Sept 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

அசாமில் தயாரிக்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேட்டில், மாநிலத்தில் வசித்து வரும் சுமார் 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால் இந்த பதிவேட்டுக்கு அங்கு மிகப்பெரும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

கொல்கத்தா,

இதைப்போல மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜியும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இதை வெளிப்படுத்தும் வகையில் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் மாநிலம் முழுவதும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கண்டன பேரணிகளை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று கொல்கத்தாவின் வடக்கு பகுதியில் மம்தா பானர்ஜி தலைமையில் கண்டன பேரணி நடந்தது. இதில் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர். இந்த பேரணி சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு நடத்தப்பட்டது.

இந்த பதிவேடு மூலம் மத்திய அரசு மக்களை பிரித்தாள முயற்சிப்பதாக பேரணியில் பேசிய மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார்.

Next Story