விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டு - ரூ.17 லட்சத்திற்கு ஏலம்
ஐதராபாத்தில் விநாயகர் சிலைக்கு படைக்கப்பட்ட லட்டு ரூ.17 லட்சத்திற்கு ஏலம் போனது.
ஐதராபாத்,
ஐதராபாத்தில் உள்ள பாலாப்பூரில் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு படைக்கப்படும் லட்டு ஆண்டுதோறும் ஏலம் விடப்படும். கடந்த ஆண்டு விநாயகருக்கு படைக்கப்படும் லட்டு 16.60 லட்சத்திற்கு ஏலம் போனது. இந்த ஆண்டும் அதேபோல் ஏலம் நடைபெற்றது.
21 கிலோ எடை உள்ள அந்த லட்டுவை ஏலம் எடுக்க ஏராளமானோர் போட்டி போட்டனர். இறுதியில் பாலாப்பூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி கோலன் ராம் ரெட்டி ரூ.17.61 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். முதன் முதலில் 1994-ம் ஆண்டு லட்டை ஏலத்தில் விடும் முறை தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுவை ஏலத்தில் வாங்குபவர்களின் எதிர்காலம் பிரகாசமாகவும், மேலும் அவர்களின் செல்வம் பெருகி, தொழில்கள் பல மடங்கு வளர்ச்சி அடையும் என்கிற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவுகிறது.
Related Tags :
Next Story