முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்திடம் 7 மணி நேரம் விசாரணை
கற்பழிப்பு புகாரில் சிக்கிய முன்னாள் மத்திய மந்திரி சின்மயானந்திடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
ஷாஜகான்பூர்,
பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சின்மயானந்த் மீது அவரது சட்ட கல்லூரியில் படித்து வரும் மாணவி, பாலியல் பலாத்கார புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக சின்மயானந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணவியின் புகாரை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு, சின்மயானந்திடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தியது. உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் உள்ள ஆசிரமத்திற்குள் அமைந்துள்ள வீட்டில் விசாரணை நடந்தது. அதன்பிறகு அந்த வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். விசாரணை முடிவடையும்வரை ஷாஜகான்நகரை விட்டு செல்லக்கூடாது என்று அவரை கேட்டுக்கொண்டனர். சட்ட மாணவி படித்து வரும் எஸ்.எஸ். சட்ட கல்லூரியின் முதல்வர் சஞ்சய்குமார் பர்ன்வாலிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

Related Tags :
Next Story