நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது-நிர்மலா சீதாராமன் பேட்டி


நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது-நிர்மலா சீதாராமன் பேட்டி
x
தினத்தந்தி 14 Sep 2019 9:43 AM GMT (Updated: 14 Sep 2019 9:43 AM GMT)

நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பொருளாதார சூழல் குறித்து டெல்லியில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. வரி விதிப்பு முறையில் சில சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. பொருளாதார சூழல் மீண்டு வருவதற்கான சீரான அறிகுறிகள் தென்படுகின்றன. வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களை வருகிற 19-ம் தேதி சந்திக்க உள்ளேன். ரிசர்வ் வங்கியின் வட்டி குறைப்பு பலனை, நுகர்வோருக்கு வழங்க வங்கிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நாட்டில் வரி செலுத்தும் முறை மிகவும் எளிமையாக்கப்படும். உற்பத்தி தொழிற்சாலைகள் முன்னேற்றம் அடையத் தொடங்கியுள்ளன .

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story