முன்னாள் மந்திரிக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார் - கற்பழிப்பு வழக்கில் விசாரணை தீவிரம்


முன்னாள் மந்திரிக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார் - கற்பழிப்பு வழக்கில் விசாரணை தீவிரம்
x
தினத்தந்தி 15 Sept 2019 2:00 AM IST (Updated: 15 Sept 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

சிறப்பு புலனாய்வு போலீசாரிடம் முன்னாள் மந்திரிக்கு எதிரான ஆதாரங்களை மாணவி கொடுத்தார். இதனால் கற்பழிப்பு வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.

ஷாஜகான்பூர்,

பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி சுவாமி சின்மயானந்துக்கு சொந்தமான உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் கல்லூரியில் படித்து வந்த மாணவி ஒருவர், சின்மயானந்த் மீது கற்பழிப்பு புகார் கூறியிருந்தார். இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் சின்மயானந்திடம் கடந்த 12-ந்தேதி இரவு விசாரணை நடத்திய அதிகாரிகள், அவரது வீட்டிலும் அதிரடி சோதனை நடத்தி ஆதாரங்களை சேகரித்தனர். எனினும் பல தடயங்கள் அங்கிருந்து மறைக்கப்பட்டிருப்பது சோதனையில் தெரியவந்தது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரும் அதிகாரிகள், விசாரணை முடியும் வரை ஷாஜகான்பூரை விட்டு வெளியேறக்கூடாது என சின்மயானந்துக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

இந்த நிலையில் சின்மயானந்த் மீதான பாலியல் குற்றச்சாட்டு கூறிய மாணவி, அதற்காக தன்னிடம் இருந்த ஆதாரங்களை நேற்று போலீசாரிடம் அளித்தார். இதில் 48 வீடியோ பதிவுகள் அடங்கிய ‘பென் டிரைவும்’ அடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story