மண்டல ஊரக வங்கி பணியிட தேர்வு- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிப்பு


மண்டல ஊரக வங்கி பணியிட தேர்வு- தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிப்பு
x
தினத்தந்தி 15 Sept 2019 12:21 PM IST (Updated: 15 Sept 2019 1:03 PM IST)
t-max-icont-min-icon

மண்டல ஊரக வங்கி பணியிடங்களுக்கான தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

வங்கி ஊழியர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளை வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு நடத்தி வருகிறது.  கடந்த ஆகஸ்டு மாதம் வங்கி அலுவலக உதவியாளர் மற்றும் வங்கி அதிகாரி ஆகிய பணிகளுக்கான முதற்கட்ட தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில் வங்கி ஊழியர் தேர்வு அமைப்பு நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் மண்டல ஊரக வங்கி பணியிடங்களுக்கான தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் எழுதலாம் என அறிவித்துள்ளது. இந்த தேர்வு இதுவரை ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வந்தது.

இது குறித்த முழு அறிவிப்பு வரும் (16 ஆம் தேதி) நாளை வெளியிடப்படும் எனவும் அதில் பணிக்கான காலியிடங்கள் மற்றும் வங்கி பணிக்கான இரண்டாம் கட்ட தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story