வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி


வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவர் - காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால் தாக்கிய மனைவி
x
தினத்தந்தி 15 Sept 2019 12:48 PM IST (Updated: 15 Sept 2019 12:49 PM IST)
t-max-icont-min-icon

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திய கணவரை மனைவி கையும், களவுமாக பிடித்த அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மெர்சல்,

தெலுங்கானாவின் மெர்சல் மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் பகுதியைச் சேர்ந்தவர் கோபால், இவருக்கு அனிதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கோபால் பல்வேறு பெண்களுடன் தகாத உறவு வைத்திருந்த‌தாக குற்றச்சாட்டு எழுந்த‌தை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு முன்பாக பேச்சுவார்த்தை நடத்தி, கோபாலை எச்சரித்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக கோபால் வீட்டில் தங்குவதை தவிர்த்து வந்த‌தால், மனைவி அனிதா அவரை நோட்டமிட தொடங்கியுள்ளார். இதில் கோபால் சுபாஷ் நகர் என்ற பகுதியில் வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்த‌தை அறிந்த அனிதா, தனது உறவினர்களுடன் அந்த பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் கோபாலும், அந்த பெண்ணும் ஒன்றாக இருப்பதை கண்டு ஆத்திரமடைந்த அனிதாவின் உறவினர்கள், கோபாலை சரமாரியாக அடிக்க தொடங்கினர். மனைவி அனிதாவும், காலணி, துடைப்பம் உள்ளிட்ட பொருட்களால், கோபாலை தாக்கியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஆழ்வார் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் அனிதாவின் உறவினர்கள் செல்போனில் பதிவு செய்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தனது கணவனை கையும் களவுமாக பிடித்து மனைவியே அடித்து உதைத்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story